Pages

Monday, March 15, 2010

தன் வினை !

புதிய தலைமைச் செயலக வளாகம் கட்டி முடித்தாயிற்று..அதில் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு முதலமைச்சர் " பிரியாணி" விருந்தும் கொடுத்தாயிற்று. (தனியாக டோக்கன் கொடுத்து டாஸ்மாக் கடைகளில் சரக்கும் அடிக்கலாமாம்)

விருந்து கொடுக்கும் விழாவில் பாடல் நிகழ்ச்சிகளில் ஹிந்தி பாடல்கள் ஒலிக்கப்பட்டன. இதுபற்றி பேசிய முதல்வர் தாம் ஹிந்தி மொழி திணிக்கப்படுவதைத்தான் எதிர்ப்பதாகவும், ஹிந்தியை அல்ல என்றும் வழக்கம்போல ஒரு மழுப்பல் பதில் சொல்லிவிட்டார்.

சென்ட்ரல் ரயில் நிலையத்தை தாண்டியவுடன் தெரியும் ஹிந்தியின் அருமை. ஹிந்தி தெரியவில்லை என்றால் நாமெல்லாம் ஊமைதான். திராவிட கட்சிகள் தங்களது சுய நலத்திற்காக இங்குள்ள மக்களை ஹிந்தி படிக்கவிடாமல் தம்மையும் தம் குடும்பத்தையும் வளர்த்துக்கொண்டன. இந்தியா என்றால் ஹிந்திதான் எனபது வெளிநாட்டினர் அறிந்து வைத்துக்கொண்டுள்ளனர். ஒரு மொழியால் பிரிவினை செய்வது  அறிவுக்கு  ஏற்ற செயல் அல்ல.

இந்திய நாட்டின் மொழியான ஹிந்தியை எதிர்த்துக்கொண்டு நம்மை அடிமைப்படுத்திய ஆங்கிலேயனின் ஆங்கில மொழியைக் கொண்டாடிக்கொண்டிருக்கிறோம். கேட்டால் அதுதான் உலக மொழியாம்...

பிரான்சில் பிரெஞ்சு, இங்கிலாந்த், அமெரிக்க, ஆஸ்த்திரேலிய போன்ற நாடுகளில் இங்க்லீஷ், ஜப்பானில் ஜப்பானீஸ், ஜெர்மனியில் டச்சு, சீனாவில் சைனீஸ், மலேசியாவில் மலாய் என்று முன்னேறிய நாடுகள் அனைத்திலும் அவர்களது தாய் மொழிதான் பேசப்படுகிறது. இப்படி அரசியல்வாதிகளது முட்டாள்தனத்தினால்தான் இப்போது நாம் தமிழை மட்டும் வைத்துக்கொண்டு திண்டாடிக்கொண்டிருக்கிறோம்..

கடவுளுக்கு வேண்டிக்கொண்டு முடி இறக்குபவனை பெரியார் கிண்டல் பண்ணுவாராம்..முடி வளரும் என்ற நம்பிக்கையில் தான் அவன் முடி இறக்குகிறான் என்று!

ஹிந்தி எதிப்புக்காக தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த கருணாநிதிக்கு தெரியாதா அந்த ரயில் தன் மீது ஏறாது என்று...!

ஆனால் கருணாநிதிக்கு அப்போது தெரியாது தன் மகன் எம் பி ஆகி , மத்திய அமைச்சர் ஆகிவிட்டாலும் ,,ஹிந்தி தெரியாத காரணத்தால் பாராளுமன்றத்திற்கே போக முடியாமல்போகும் என்று.!!!

14 comments :

ஜீவன்சிவம் said...

ஹஹ..ஆஹா .. பாராளுமன்றத்திற்கு போவதா முக்கியம்....டெல்லியை கலக்கிய அண்ணன் வாழ்க வாழ்க என்ற கட்-அவுட் மதுரை மூலை முடுக்கெல்லாம் மிரட்ட வேண்டும் அதுதானே சார் இங்கே அரசியல்....அதே கலைஞர் நன்றாகவே கற்று கொடுத்திருக்கிறார்.

Kevin Matthews said...

//பிரான்சில் பிரெஞ்சு, இங்கிலாந்த், அமெரிக்க, ஆஸ்த்திரேலிய போன்ற நாடுகளில் இங்க்லீஷ், ஜப்பானில் ஜப்பானீஸ், ஜெர்மனியில் டச்சு, சீனாவில் சைனீஸ், மலேசியாவில் மலாய் என்று முன்னேறிய நாடுகள் அனைத்திலும் அவர்களது தாய் மொழிதான் பேசப்படுகிறது. இப்படி அரசியல்வாதிகளது முட்டாள்தனத்தினால்தான் இப்போது நாம் தமிழை மட்டும் வைத்துக்கொண்டு திண்டாடிக்கொண்டிருக்கிறோம்..//

எது நமது தாய் மொழி?

மர்மயோகி said...

நன்றி ஜீவன் சிவம் & kevin Mathews - தமிழ் தான் நமது தாய் மொழி,..இந்தியாவிற்கு என்று ஒரு பொது மொழி இருந்தால்தான் ஒரு மொழியில் வர்த்தகதொடர்பு கொள்ள முடியும்...ஹிந்தி ஒன்றும் அந்நிய மொழி அல்லவே.. ஆங்கிலத்தை விட நமக்கு மிகவும் நெருக்கமான மொழி..ஆங்கிலத்தை ஆதரிக்கும் நாம் நம் நாட்டு மொழியான ஹிந்தியை எதிர்த்து, எப்படி தேச ஒற்றுமை பற்றி பேச முடியும்?

SUBBU said...

அருமை !!!

raj velur said...

Who stopped u frm learning Hindi. Why people are always searching for reason not learn? Cant u see people who r going to spoken English classes after PG also? Tell me from 1st standard to college u r learning English and r u sure u can speak English fluently? Its the need that matters. If I need to survive in North India I'll definately learn Hindi. If not whats the need? If I need to survive in Japan I must learn Japenese. Thats it.

Kevin Matthews said...

ஹிந்தி மொழி தெரிந்தால் தான் தேச ஒற்றுமை நிலவும் என்றால், ஹிந்தி தெரிந்த சீக்கியர்கள், காஷ்மீரிகள், மாவோயிஸ்ட்டுகள் இந்திய ஒருமைபாட்டிற்க்கு எதிராக ஆயுதம் ஏந்தினார்களே எதனால்? ஆகவே தேசிய ஒருமைபாட்டிற்கு மொழி ஒரு பொருட்டல்ல. தேசிய ஒருமைபாட்டுக்கு பிரச்சனை - பிற காரணங்களால். மதமும் காரணமல்ல. நம்மை ஒற்றுமையாக வைத்திருப்பது பண்பாடும் நமது அரசியலமைப்பு கட்டமைப்பும் தான்.

மர்மயோகி said...

நன்றி நண்பர் raj velur மற்றும் kevin maththews..
இதில் புரிந்துகொள்ளல் தான் நமக்குள் உள்ள பிரச்சினை..ஹிந்தி மட்டுமல்ல எந்த மொழியையும் நாம் விரும்பி கற்றுக்கொள்ளலாம்..அனால் அதற்க்கான சூழ் நிலையை நமக்கு முன்னே உள்ளவர்கள் எற்படுத்திதரவில்லை..அதற்கு காரணம் இந்த அரசியல்வாதிகளின் சுய நலம்தான்..ஆந்திர, கர்நாடகா மற்றும் கேரளா நமக்கு அருகில் உள்ள அண்டைய மாநிலங்கள்தான் ஆனால் அவர்களைப்போல் நமக்கு சரளமாக ஹிந்தி பேச வரவில்லை..காரணம் ஹிந்தியை நம்முடைய எதிரி என்பதுபோல் ஆக்கி வைத்து விட்டதுதான்..ஏதோ ஒரு அந்நிய மொழியை கற்பது போலதான் அதை கற்க சொல்கிறீர்களா? நமது நாட்டு மொழி ஏன் நம் பள்ளிக்கூடங்களில் இரண்டாவது மொழியாகக்கூட கற்றுத்தரப்படுவதில்லை...?

நண்பர் kevin maththews அவர்களே..
ஹிந்தி மொழியைக் கற்றால்தான் தேசிய ஒற்றுமை வரும் என்று நான் சொல்லவே இல்லை..நன்றாக கவனிக்கவும்..ஹிந்தி நமது தாய் நாட்டின் மொழி..பெரும்பாலான மக்கள் பேசும் மொழி..நம் தமிழ் நாட்டின் எல்லையைக் கடந்து விட்டால் ஹிந்தி எங்கேயும் பேசிக்கொள்ளலாம்..கவனிக்கவும் ஆங்கிலம் அல்ல..நம் நாட்டு மொழியை நாமே எதிர்த்துகொள்வதால் அந்த மொழியை பேசும் மக்களும் நம்மை எதிரிகளாகத்தான் பார்க்க நேரிடும் - அப்படிப்பட்ட நிலையில் நாம் எப்படி தேச ஒற்றுமை பற்றி பேச முடியும்..அப்படி பேசுவதும் கேலிக்கூத்தாகத்தான் முடியும்..

நான் பிறப்பால் தமிழன் தான்..தமிழ் மொழி மட்டும்தான் என்னால் சரளமாகப் பேச முடியும்..நான் வியாபார நிமித்தமாக இந்தியாவிலேயே சுற்றவேண்டியிருக்கிறது..அப்பொழுதுதான் எனக்கு புரிகிறது..ஹிந்தியின் முக்கியத்துவம்..வெளிநாடுகளுக்கு செல்லும்போதுகூட இதே நிலைதான். ஒரு நாட்டில் - ஜப்பான்- நான் இருக்கும்போது பஞ்சாப் , உத்திரபிரதேசத்தை சேர்ந்த நண்பர்களும், மற்றும் இலங்கையைச் சேர்ந்த நண்பர்களும் ஒன்றாக இருக்க வேண்டிய சூழல்..ஆனால் நாம் நாட்டைச்சேர்ந்த பஞ்சாபி,, உத்திரப்பிரதேசம் ஆகிய நபர்களின் மொழி எனக்கு புரியவில்லை..அனால் இன்னொரு நாடான இலங்கையைச் சேர்ந்த நபருடன் (அவர் தமிழ்) சரளமாக உரையாடினேன்..இதை கவனித்த வெளிநாட்டைச் சேர்ந்த நண்பர்கள் கேலியாகக் கேட்டனர்..உண்மைதான்..." நீ என்ன உங்க நாட்டுக்காரனின் மொழி உனக்கு புரியவில்லை...வேறொரு நாட்டை சேர்ந்தவனின் மொழி உனக்கு புரிகிறதா " என்று..புரிகிறதா?

tshankar89 said...

Hi,

Germans speak deutche and hollanders (people of netherlands) speak Dutch.

Sankara N Thiagarajan

Kevin Matthews said...

//ஆந்திர, கர்நாடகா மற்றும் கேரளா நமக்கு அருகில் உள்ள அண்டைய மாநிலங்கள்தான் ஆனால் அவர்களைப்போல் நமக்கு சரளமாக ஹிந்தி பேச வரவில்லை//

ஆந்திராவில் ஹைதிராபாத்துக்கு வெளியே ஹிந்தியில் பேசி பாருங்கள் பார்ப்போம். ஹிந்தியை 3rd language ஆக படித்தாலும் அவர்களால் சரளமாக பேச முடிவதில்லை. இது தான் உண்மை.

//நமது நாட்டு மொழி ஏன் நம் பள்ளிக்கூடங்களில் இரண்டாவது மொழியாகக்கூட கற்றுத்தரப்படுவதில்லை...?//

ஏன் கற்றுத்தரப்பட வேண்டும்? ஹிந்தி நமது தேசிய மொழி கிடையாது (சந்தேகம் இருந்தால் குஜராத் உயர்நீதிமன்றத்து சமீபத்திய தீர்ப்பை படித்து பாருங்கள். Wikipedia web site லும் தெரிந்து கொள்ளலாம்). இந்தியாவில் 35% மக்களே ஹிந்தியை தாய்மொழியாக கொண்டவர்கள். இவர்களில் பெரும்பான்மையானவர்களுக்கு ஹிந்தியை தவிர வேறு மொழிகள் தெரியாது அல்லது கற்று கொள்ள விருப்பமில்லை. ஆனால் மற்ற 65% மக்களும் ஹிந்தியை படித்து தங்களோடு உரையாட வேண்டும் என்று எதிர்பார்ப்பவர்கள். மாணவர்களுக்கு உள்ள கல்வி சுமையில் இன்னொரு சுமை தேவையா? மார்வாடிகள் / நடிகைகள் இங்கே பிழைக்க வரும்போது தமிழ் கற்றுக்கொள்வதில்லையா? 2nd language ல் தமிழ் கற்றுக்கொண்டா வருகிறார்கள். அதுபோல் நாமும் அங்கு போகும் போது ஹிந்தி கற்று கொள்ளலாம்.

//நம் நாட்டு மொழியை நாமே எதிர்த்துகொள்வதால் அந்த மொழியை பேசும் மக்களும் நம்மை எதிரிகளாகத்தான் பார்க்க நேரிடும்//

ஐயா எத்தனை ஹிந்திகாரர்கள் மற்ற மாநில மொழிகளை கற்க்க விரும்புகிறார்கள் என்று சொல்லுங்கள் பார்ப்போம். நான்கு தமிழர்களுக்கு மத்தியில் இரு ஹிந்திகாரர்கள் இருந்தால், ஹிந்தியில் தான் அவர்கள் பேசுகிறார்கள். இவர்களுக்கு புரியாதே.. ஆங்கிலத்தில் பேசுவோம் என்ற பண்பு கூட கிடையாது. அது அவர்களுடைய மொழிப்பற்று. நாம் தான் அவர்களுக்கும் புரிய வேண்டும் என்பதற்க்காக ஆங்கிலத்தில் பேசுவோம்.

//நான் வியாபார நிமித்தமாக இந்தியாவிலேயே சுற்றவேண்டியிருக்கிறது..அப்பொழுதுதான் எனக்கு புரிகிறது..ஹிந்தியின் முக்கியத்துவம்.//

நானும் வேலை நிமித்தமாக அரபு நாட்டில் தங்க வேண்டியுள்ளது. சில மாதங்களில் அரபிக் பேச கற்றுக்கொண்டேன். என்னைபோல் லட்சக்கணக்கான தமிழர்கள் இங்கு வாழுகிறார்கள். அவர்கள் தமிழ்நாட்டில் அரபிக் 2nd language ஆக பள்ளிகளில் கற்றுதரபடவேண்டும் என்று கேட்கவில்லையே? ஒன்றாம் வகுப்பு முதல் ஆங்கில பாடம் படிக்கும் எத்தனை மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் சரளமாக பேச தெரியும். ஆங்கில வகுப்பில் மாணவர்கள் படும் பாடு இருக்கிறதே. அந்த நிலைமை தான் ஹிந்தி வகுப்பிலும் ஏற்படும்.

//வெளிநாட்டைச் சேர்ந்த நண்பர்கள் கேலியாகக் கேட்டனர்..உண்மைதான்..." நீ என்ன உங்க நாட்டுக்காரனின் மொழி உனக்கு புரியவில்லை...//

எங்களிடமும் இந்த கேள்வியை கேட்டார்கள். ”இந்தியாவில் ஹிந்தி மட்டும் மொழி அல்ல. (35% மட்டுமே) மற்ற மொழிகளும் இருக்கின்றன. நாங்கள் பேசுவது தமிழ்” என்று விளக்கினோம். அவ்வப்போது ஒன்றிரண்டு தமிழ் வார்த்தைகளையும் கற்றுகொள்வார்கள்.

இந்தியா என்றால் ஹிந்தி மட்டும் தான் மொழி என்று திட்டமிட்டு பரப்பிவிட்டார்கள் ஹிந்திகாரர்கள்.

என்ன புரிகிறதா?....

மர்மயோகி said...

நன்றி kevin maththews ஆனால் ஹிந்தி மொழி பேசுபவர்கள் மற்ற மொழி பேசுபவர்களை எதிர்க்கவோ, இல்லை..நாம்தான் ஹிந்தியை ஒழிப்போம் என்று கோஷமிட்டுக் கொண்டிருக்கிறோம்..அவர்களை தமிழ் கற்றுக்கொள்ளுங்கள் என்று கூறுவதெல்லாம் வீண் விதண்டாவாதம்...பிரக்டிக்கலா நெனைச்சு பாருங்க...உலகம் முழுவதும் பரவி இருப்பது (இந்திய மொழிகளில்) தமிழா, ஹிந்தியா..தமிழர்கள் உலகம் முழுதும் இருக்கிறார்கள் நான் ஒப்புக்கொள்கிறேன்..ஆனால் எத்தனை தமிழர்கள் தமிழ் பேசுகிறார்கள்? தமிழ் பேசுவதற்கு வெட்கப்படும் தமிழர்கள் நமது சென்னையிலேயே அதிகம்..ஆங்கிலம் பேசுவதுதான் பெருமை என்று நினைப்பவர்களே அதிகம்..

தாம்சன் said...

this is what called us slave mentality. I dont find any difference between the guy who is ready to speak in engish in chennai and YOU. You r ready to give up ur own MOTHER tongue just to satisfy others. As I told before the necessity makes the difference. Can u spot out how many of north indians learned tamil before coming here(even though they need to survive here)? If its required we can learn it boss. Dont make it compulsory. With my knowledge I'm saying there are more tamilins are available compare to hindi guys. Its a myth thats been spread over the world that hidhi is India's language. Now only the world is exploring the other languages like Tamil. Dont spoil this.

Kevin Matthews said...

//ஹிந்தி மொழி பேசுபவர்கள் மற்ற மொழி பேசுபவர்களை எதிர்க்கவோ, இல்லை..//

யார் சொன்னார்கள்? ஹிந்திகாரர்கள் தமிழை கிண்டல் அடிப்பதை நானே பல முறை பார்த்திருக்கிறேன். தமிழர்கள் இழுத்து இழுத்து ஹிந்தி பேசுவதை பல திரைப்படங்களிலும் டி.வி. சீரியல்களிலும் காட்டி நையாண்டி செய்கிறார்கள்.

//நாம்தான் ஹிந்தியை ஒழிப்போம் என்று கோஷமிட்டுக் கொண்டிருக்கிறோம்//

நாம் டில்லியிலோ போபாலிலோ போய் கோஷமிடவில்லையே. தமிழ்நாட்டிலிருந்து ஹிந்தியை ஒழிப்போம் என்று தமிழ்நாட்டிலிருந்து கோஷமிடுகிறோம். ஹிந்திகாரர்களை ஒழிப்போம் என்று அல்ல. அவர்கள் தான் தமிழை மட்டுமல்ல தமிழனையும் வெறுத்து விரட்டி அடிக்கிறார்கள்.

நாம் தமிழர்கள் தான், நடிகைகளோ மற்றவர்களோ தப்பு தப்பாக தமிழ் பேசினாலும் ரசித்து ஆனந்தபடுகிறோம். எங்கே ஹிந்திகாரர்களிடமும் ஆங்கிலேயர்களிடமும் அவர்கள் மொழியில் தப்பு தப்பாக பேசுங்கள் பார்ப்போம்.

மர்மயோகி said...

நன்றி நண்பர்களே..இது இப்படியே முடிவில்லாமல் போய்க்கொண்டிருக்கிறது..எனினும் சொல்லிக்கொள்கிறேன்..எல்லா மொழிக்காரர்களும் மற்றவர்களின் மொழியை கிண்டலடிப்பது சகஜமானதுதான்..நாமும்தான் மலையாளியையும், ராஜஸ்தான் சேட்டுகளையும், தெலுங்கர்களையும் கிண்டலடித்துக் கொண்டிருக்கிறோம்..இது பெரிய விசயமல்ல..

இந்தியாவுக்கு என்று ஒரு பொது மொழி தேவையா இல்லையா..என்பதுதான் எனது கேள்வி..

Kevin Matthews said...

//ஹிந்தி மொழி பேசுபவர்கள் மற்ற மொழி பேசுபவர்களை எதிர்க்கவோ, இல்லை..//

அவர்களுக்கு அந்த அவசியம் ஏற்ப்படவில்லை. ஹிந்திகாரர்கள் 8th scheduled languages எதாவது ஒன்றை 3rd language ஆக எடுத்து படிக்க வேண்டும் என்று நிர்பந்திக்கபடட்டும். அப்பொழுது தெரியும் அவர்கள் ஆதரிக்கிறார்களா அல்லது எதிர்க்கிறார்களா என்று.



//இந்தியாவுக்கு என்று ஒரு பொது மொழி தேவையா இல்லையா..என்பதுதான் எனது கேள்வி..//

தேவைப்படுகிறவர்கள் பிற மொழிகளை கற்றுக்கொள்ளலாம் (ஹிந்தி பிரச்சார் சபா மற்றும் பல அமைப்புகள் உள்ளன). வலுக்கட்டாயமாக ஒரு மொழியை பிற மக்களிடம் தினிக்க கூடாது. இது தான் என் நிலைப்பாடு.

Post a Comment

பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?