Pages

Thursday, March 18, 2010

சினிமா நடிகனெல்லாம் தலைவனா?


யார் தலைவன்..?

இந்தியாவை ஆண்ட வெள்ளையர்கள் இந்தியாவை ஒன்றும் மோசமான பொருளாதார நிலையில் வைத்ததில்லை..ஆனால், நமது சுய மரியாதை, மற்றும் சுதந்திரம் பறிபோனது..அதற்காக தனது சொத்து சுகங்களை இழந்து, வருங்கால சந்ததியருக்காக போராடிய, மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, அபுல்கலாம் ஆசாத் போன்ற தலைவர்களை நாம் தலைவர்கள் என்று அழைத்தோம்..

சுதந்திரம் பெற்ற இந்தியாவில் ஒரு பொது நிகழ்ச்சிக்காக வந்த அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேருவிடம் ஒரு நிருபர் கேள்வி கேட்கிறார் " நீங்கள் பிரதமராகி இந்த இந்தியாவிற்க்கு இதுவரை என்ன செய்து இருக்கிறீர்கள்" என்று..அதற்க்கு நேரு அளித்த பதில் " இதோ ஒரு பிரதமரிடம் நேரில் கேள்வி கேட்டுகொண்டிருக்கிராயே!" என்று..

ஆனால் இன்றைய சாதாரண ஒரு கவுன்சிலரையோ வார்டு மெம்பரையோ அவ்வளவு சுலபமாக சந்தித்துவிட முடியுமா? ஏன் நமது காசில் பிழைக்கின்ற கூத்தாடி சினிமா நடிகையையோ நடிகனையோ அவ்வாறுதான் சந்தித்துவிட முடியோமா? கேட்டால் பிரைவசியாம்...

 இன்றைய கால கட்டத்தில் தலைவன் என்று அலைக்கபடுகிறவர்களின் தகுதியை நாம் யாராவது சிந்தித்துப் பார்கிரோமா என்றால்..நிச்சயமாக..நாம் இந்த விசயத்தில் நூறு சதவீதம் முட்டாள்களாகத்தான் இருக்கிறோம். என்னை பொறுத்தவரை, இன்றைய காலத்திற்கு, தலைவன் என்ற சொல்லையே எடுத்துவிட வேண்டும்.. யார் யாரெல்லாம் தலைவன் என்று அழைக்கப்படுகிறார்கள்..?

கள்ளச்சாராயம் விற்று பணக்காரனாகி, பின்பு அரசியலுக்கு வந்தவன், விபச்சாரம் செய்து அரசியலுக்கு வந்தவன், கடத்தல் தொழில் செய்து அரசியலுக்கு வந்தவன், ரவுடித்தனம், பொறுக்கித்தனம் செய்து அரசியலுக்கு வந்தவன், இன்னும் சினிமாவில் நடித்து, அரசியலுக்கு வந்தவன்..இவர்களைத்தான் தலைவன் என்று அழைக்கிறோம்..

இன்னும் சினிமாவில், ரவுடியாகவும், பொறுக்கியாகவும் நடித்துக்கொண்டிருப்பவனையும் தலைவன் என்று கொண்டாடுவதற்கும், அவனுடைய கட் அவுட்டிற்கு பாலாபிஷேகம் பண்ணுவதற்கும் ஒரு தரங்கெட்ட கூட்டம் எப்போதும் காத்துகொண்டிருக்கிறது..

இவன் சினிமாவில் ஒரு ரவுடியை அடித்தால் அவனை தலைவா என்று விசிலடித்துக்கொண்டிருக்கும் ஒரு கூட்டம்தான் எந்த தகுதியும் இல்லாத நடிகர்களையும் அரசியலுக்கு வர ஆர்வமூட்டுகிறது..

பத்தாததற்கு ஒரு நடிகனை, ஒரு கூத்தாடியை VIP என்று அழைத்து வியாபாரம் செய்யும் கேவலமான பத்திரிகை கூட்டமும் இதற்கு தூபம் போட்டுக்கொண்டிருக்கிறது..ஒரு நன்மை செய்து தலைவன் ஆனவன் என்று இப்போது ஒருவனை கைகாட்டி விட முடியுமா? எவ்வளவு கேவலமானவனாக இருந்தாலும், அவன் பிரபலமாகிவிட்டால் இன்றைய பத்திரிகை வியாபாரிகள் அவனிடம் முதலில் ஒரு பேட்டிக்காக சென்று அரசியலில் எப்போது குதிக்கப்போகிறீர்கள் (அது என்னடா குதிப்பது?) என்று தூபம் போட்டு விட்டு அவனிடம் கவரை வாங்கி விட்டு வந்து விடுகிறார்கள்..

பிறகு வந்து அரசியல் ஒரு சாக்கடை என்று சொல்லிக்கொண்டு அலைகின்றன இந்த சாக்கடைகள் ...அரசியல் ஒரு போதும் சாக்கடை கிடையாது...அது ஒரு தெளிந்த நீரோடை போன்றதுதான்..இங்குள்ள கழிவுகள் கலந்துதான் அதை சாக்கடையாக்கிவிட்டு அரசியலைப் பழிக்கின்றன ..இங்கே அரசியல்வாதி, நடிகன், நடிக நடிகை அட்டையில் போட்டு ஆபாச வியாபாரம் பண்ணும் பத்திரிக்கைகாரன் அனைவரும் ஒரு துளி கூட மக்கள் நலம் பார்க்காமல் நூறு சதவீதம் சுயநலத்திற்காக எதையும் செய்யும் கேவலமான வியாபாரிகள்தான்..

இப்போது அரசியலுக்கு வரத்துடிப்பவன் எவனாவது வியாபார நோக்கமின்றி அரசியலுக்கு வருவானா?

இருக்கிற சொத்து சுகங்களை இழந்து அரசியலுக்கு வந்தவர்கள் நமது முன்னோர்கள்..

பொறுக்கித்தனம் செய்தும், கொள்ளையடித்தும், இருக்கிற அனைத்து கேவலங்களை செய்தும் சேர்த்த சொத்துக்களை காப்பதற்காக அரசியலுக்கு வரும் மிருகங்கள் இன்றைய அரசியல்வாதியும், அரசியலுக்கு வரத்துடிக்கிற நடிகர்களும்...

அப்படி என்னதான் இவர்கள் செய்து கிழித்துவிட்டார்கள்?


என்றாவது நாம் சிந்தித்திருக்கின்றோமா?


எங்காவது ஒரு பூகம்பமோ அல்லது ஏதோ ஒரு இயற்கை சீற்றமோ ஏற்பட்டு பாதிப்பு ஏற்பட்டுவிட்டால் பொதுஜனம் தமது காசைத்தான் கொடுக்கிறான்..ஆனால் காசு கொழுத்த இந்த அரசியல்வாதிகள் மக்களிடம் நிதி கேட்கிறான்,, சினிமாக்காரன் கலை நிகழ்ச்சி என்ற பெயரில் குத்தாட்டம் போட்டு மக்களிடம் பிச்சை எடுக்கிறான்..ஏன் இவன்களிடம் காசு இல்லையா? ஒவ்வொரு படத்திற்கும் கோடிக்கணக்கில் காசு பார்க்கும் இந்த பன்னாடைகள் என்றைக்காவது தங்களது சொந்த பணத்தைகொடுத்து உதவியதுண்டா?

பத்திரிக்கைக்காரனைக்கூட எடுத்துக்கொள்ளுங்கள்...தங்கள் பத்திரிக்கைதான் இந்தியாவிலேயே அதிகம் விற்பனையாகும் பத்திரிகை என்று தம்பட்டம் அடித்துகொள்ளும் பத்திரிக்கைகாரன் என்றைக்காவது தனது வருமானத்தை இது போன்ற நிகழ்வுகளுக்கு கொடுத்து இருக்கிறானா? அதையும் தனது பத்திரிகை படிக்கும் இளிச்சவாயன் பொது மக்களிடம் பிச்சை எடுத்து தன் பெயரை போட்டு தம்பட்டம் அடித்துகொள்வான்..

கடைசிவரை ஏமாந்து கொண்டு இருப்பவன் நடுத்தரவர்க்க பொது மக்கள்தான்...அவனேதான் சினிமாக்காரனையும் - அவனது நடிப்பை நடிப்பென்று தெரிந்தும் அவனது சொந்த வாழ்க்கையோடு இணைத்து இது போன்ற கழிசடைகளை தலைவன் என்றும் வருங்கால முதல்வன் என்றும் கூவிக்கொண்டிருக்கிறான்..

மத்தியிலே கூட்டாட்சி மாநிலத்திலே சுய ஆட்சி என்று கோஷமிட்டவர்கள் இன்று மத்தியிலும் மாநிலத்திலும் குடும்ப ஆட்சி நடத்திக்கொண்டிருக்கின்றனர்.


அரசியல் விபத்தின் மூலம் ஆட்சிக்கு வந்தவர்கள் இன்று கொடநாட்டு பங்களாவில் கும்பகர்ண தூக்கமிடுகின்றனர்..

இந்தியாவில் ஒட்டு வாங்கி, விடுதலைப்புலிக்கு வக்காலத்து வாங்கும் வைக்கோ இன்று ஜெயலலிதாவின் முந்தானையைப் பிடித்துகொண்டு அலைகிறான்

மரம் வெட்டி, மரத்துக்கு மரம் தாவிக்கொண்டிருந்த ஒரு வானரம் இன்று தனிமரமாய் தவிக்கிறது,

தனித்தே ஆட்சி என்று குடிபோதையில் கூவிக்கொண்டிருன்தவன் இன்று கூட்டணியைப் பற்றி சிந்திக்கிரானாம்..

நதிநீர் இணைப்புக்கு தனது பணத்திலிருந்து ஒரு கோடி ருபாய் தருவேன் என்று பந்தா விட்டவனிடம் இருந்து பேச்சையும் காணோம் மூச்சையும் காணோம்...

கடவுள் இல்லையென்று சொல்லவில்லை..கடவுள் இருந்தால் நல்லது என்று நாத்திகம் பேசியவன் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை தீவிரவாதி என்று படம் எடுத்து கல்லாகட்டுகிறான்..

அரசியலுக்கு வர அச்சாரம் போட்டுவிட்டு, சட்டவிரோதமாக கட்டப்பட்ட தனது திருமண மணடபத்தின் மீது நடவடிக்கை என்ற உடன் ஆளும்கட்சிக்கு ஜால்ரா தட்டுகிறான் ஒரு தளபதி..

நடிகர்களை மிரட்டுகிறார்கள் என்று பொதுமேடையில் பேசிவிட்டு முதல்வர் காலில் விழுகிறது ஒரு தல..

இவர்கள் இப்படி எல்லாம் கூத்தடிப்பது மக்கள் நலனுக்காகவா?
மகாத்மா போன்ற தலைவர்களுக்கு சிலை வைத்து விட்டு மரியாதையை செலுத்துவது ஒன்றும் பெரிய மரியாதை கிடையாது..!!!

சுயநல கழிசடைகளை தலைவன் என்று அழைத்து அந்த நிஜ தலைவர்களை அவமானப்படுத்தாமல் இருப்பதுதான் நாம் அவர்களுக்கு கொடுக்கும் ஒரிஜினல் மரியாதை..


நிஜமாக சிந்திப்போம். நடிகனை தலைவன் என்று சொல்வதை இன்று முதல் நிறுத்துவோம்..நம்மால் முடிந்த ஒரு சிறு நன்மையை இன்று முதல் ஆரம்பிப்போமே...

31 comments :

Robin said...

உங்கள் ஆதங்கம் நியாயமானது. என்று கூத்தாடிகளை தலையில் தூக்கி வைத்து ஆடத்தொடங்கினோமோ, அன்றைக்கே தமிழக அரசியல் நாறத் தொடங்கி விட்டது.

ஆர்வா said...

இந்த அளவிற்கு யோசிச்சிருந்தா நாம ஏன் இப்படி இருக்கோம்...

பொன் மாலை பொழுது said...

இந்த கோபமும், உணர்ச்சிகளும், வரிகளும் நியாயமானதுதான், நிறையபேர்கள் இவ்வாறுதான் புலம்பிக்கொண்டே இருக்கிறோம்.இதை விடுத்து என்ன செய்யலாம்? திரைப்படங்களை நிராகரிக்கலாம், பத்திரிக்கைகளை நிறுத்தலாம், கழிசடை டி.வி. இணைப்பே வேண்டாம் என்று வெட்டிவிடலாம். ஓட்டு போடும்போது கட்சி பார்க்காமல் சுமாரனவரை அல்லது சற்று நல்லவரை தேர்ந்தெடுக்க ஓட்டு போடலாம். ஒரு தனி மனிதனாக இதெல்லாம் சரிதான். ஆனால் ஒரு கூட்டமாக,ஊராக,ஒரு சமூக அமைப்பாக நாம் இருக்கும் போது இந்த மாற்றங்களை எப்படி பொதுவில் கொண்டு செல்லலாம் என்று எவரும் ஏன் சொல்வதில்ல?

எனக்கு இப்படி எழுத துளியும் மனமில்லை.நமக்கு வாய்த்த 'ஜனநாயகம் ' இதுதான், இது போன்ற கேவலங்களுக்கு அடிப்படியாகிவிட்டது இல்லையா? இது போன்ற (போலி) ஜன நாயகம் ஏன் வேண்டும் நமக்கு?ஒழுன்கீனமற்ற .கட்டுப்பாடு இலாத இந்த கூட்டத்தை நேர் செய்து புதிய தலை முறை கான அடக்குமுறைதான் சாலச்சிறந்தது.ஆனால் இவைகளை இப்படித்தான் நமது நாட்டில் செயல் படுத்த இயலும்.

இப்படி எழுதினால் என்னை ஏதோ சர்வாதிகார மனப்போக்கு உள்ளவன், கம்யூனிஸ்ட் அல்லது வேறு ஏதாவது பெயரில் வசைபாட எல்லோரும் தயார்.எனக்கு சர்வாதிகாரமும் தெரியாது, கம்யுனுசமும் அறியேன்.

மர்மயோகி said...

நன்றி திரு ராபின்,
திரு கவிதைக் காதலன்,
திரு சுக்கு மாணிக்கம்....

bala said...

மரமயோகி அய்யா,

நீங்க கேட்டது நியாயமான கேள்விதான்.ஆனால் இது வரை சினிமாவுக்கு வசனம் எழுதி, தலைவர்களான முஞ்சிகள், நடிகர்களை விட கேவலமான மூஞ்சிகளாகத் தானே இருந்து வந்திருக்கின்றன.வசனம் எழுதியவர்களை விட நடிகர்களே மேல்.

Rajan said...

நடிகன் அரசியலுக்கு வரக் கூடாதுன்னு இல்ல ! வந்தவன் எவன்தான் சரியா இருந்துருக்கான் ! சினிமாக் காரன் அப்பிடிங்கற ஒரே காரணத்துக்காக ஒதுக்கறது நியாயமில்ல

மர்மயோகி said...

நன்றி பாலா மற்றும் ராஜன் அவர்களே,,
யாரும் அரசியலுக்கு வரலாம் - அர்பணிப்பு உணர்வுடன்...ஆனால், பணத்துக்காகவும், தவறான வழியில் ஈட்டிய பணத்தைக் காத்துகொள்வதர்க்கும்தான் இந்த நடிகர்களும் மற்றும் அரசியலுக்கு வரும் அனைவரும் அரசிலில் (அவர்களே சொல்வதுபோல்) குதிக்கிறார்கள் ....! இவரகளைப்பற்றி தைரியமாக நீங்கள் விமர்சிக்கலாம், அவர்கள் யாரும் நன்மை செய்வதற்காக அரசியலை பயன் படுத்தப் போவது இல்லை...

ஜீவன்சிவம் said...

இன்னும் பத்தாண்டுகளில் கூவம் சுத்தமாகும்....என்று இன்றைய செய்திதாளில் முதல் பக்க விளம்பரம் கொடுத்தாகிவிட்டது. ஒரு மகனுக்கு மதுரை இன்னொரு மகனுக்கு தமிழ்நாடு, பேரன் பேத்திகளுக்கு பல பல தொழில்கள் டிவி சேனல் முதல் கொண்டு சினிமா கம்பனி வரை வைத்து கொடுத்தாகி விட்டது. கொள்ளுபேரன் பாவம் என்ன செய்வான். அதற்க்கு தான் இந்த நீண்ட கால வைப்பு திட்டம்.


இதே பற்றி ஒன்றுமே சொல்லவில்லேய

மர்மயோகி said...

நண்பர் ஜீவன் சிவம் அவர்களே..
நீங்கள் குறிப்பிட்டுள்ள செய்தி "மத்தியிலே கூட்டாட்சி மாநிலத்திலே சுய ஆட்சி என்று கோஷமிட்டவர்கள் இன்று மத்தியிலும் மாநிலத்திலும் குடும்ப ஆட்சி நடத்திக்கொண்டிருக்கின்றனர். !" என்ற வரிக்குள்ளே அடங்கி இருக்கிறது என்று நினைக்கிறேன்...
நன்றி

ராம்ஜி_யாஹூ said...

cinema actors have helped the fans when they come into power, Example-MGR halped his fans RMV, Karuppa sami paandiyan, KKSSR ramachandran, to get post, money, hence we support cinema actors because when they become CM they will give us MLA, MP post, contracts.

Reema sen pic was nice.

நாமக்கல் சிபி said...

GOOD POST

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

துவைத்துக் காயவிட்டுள்ளீர்! ஆனால் நடிகர்களுக்கு உயிரைக்கொடுப்போரைக் காணவில்லை;
அருமை!

பஹ்ரைன் பாபா said...

எல்லாவற்றுக்கும்மேல்..ஒரு நடிகனாக இருப்பதால் மட்டும் ஒருவருக்கு தலைவர் பதவி நிராகரிக்கப்படவேண்டும் என்ற கூற்றே தவறு... பழைய தலைவர்களோடு.. ஒப்பிடுவதும் தவறு..இன்றைய காலகட்டத்தில் இவர்கள்தான் தலைவர்கள்..காரணம்..எல்லோருக்கும் தெரிந்த நபர்கள் இவர்கள் மட்டுமே.. இப்போதுள்ள மக்கள் புத்திசாலிகள் தலைவர்களை தேர்ந்தெடுப்பதில்..வெறும் நாலு பேருக்கு தெரிந்த மனிதரை தலைவராய் கொண்டாடுவதில் என்ன நன்மை வந்து சேரப்போகிறது..ஆதலால்தான் எல்லோருக்கும் தெரிந்த சினிமா நடிகர்களையோ..அரசியல்வாதிகளையோ.. தலைவர்களாக ஏற்றுக்கொண்டு.. அவர்களை உண்மையான தலைவர்களாகக முயர்ச்சித்த்துகொண்டே இருக்கிறார்கள்.. அவர்களை முட்டாள் என்று கூறுவதை நான் ஒரு போதும் ஏற்க மாட்டேன்.. மக்களை திட்டாதீங்க பாஸ்..

Unknown said...

Translate Please

மர்மயோகி said...

நன்றி
திரு பாலா
திரு ராஜன்
திரு ஜீவன் சிவம்
திரு ராம்ஜி யாஹூ
திரு நாமக்கல் சிபி
திரு யோகன் பாரிஸ்
திரு பஹ்ரைன் பாபா
and zackoverload

Anonymous said...

முடிச்சுக்குள் முடிச்சு. Linked together. ஒன்றைப்பற்றிக்கொண்டு ஒன்று. ஒரு லிங்கை மட்டும் தனியாக எடுத்து சரி பண்ணிவிட்டால், அந்த செயின் முழுவ்தும் சரியாகி விடாது.

நடிகர்கள் அந்த செயினில் ஒரே ஒரு லிங்க். அரசியல்வாதிகளாகி பதவிகளப்பிடித்து இலாபம் அடைய பார்க்கிறார்கள். இவர்களுக்கு முன் மற்றவர்கள் செய்து வெற்றியடைந்தார்கள்.

இதுதானே கதை. தவறான கதை, to be exact.

Now think. How to make the whole chain effective?

அதற்குமுன் இந்த செயினில் மக்களும் ஒரு லிங்க். மிக நீண்ட லிங்க் to be exact.

ஒட்டு மொத்தமாக அனைவரும் மோசம்.

இந்த மக்களிடமிருந்தே, இந்த கலாச்சாரத்திலிருந்தே, இன்றைய தலைவர்களும், தலைவர்களாகத் துடிக்கும் நடிகர்களும், வருகிறார்கள்; வந்திருக்கிறார்கள்.

நம் கலாச்சாரம் ஒரு போலிக்க்லாச்சாரம். பொய், உண்மையாக மதிக்கப்பட்டு, போலிகள் மக்களைக்கவர்ந்து, எங்கும் எதிலும் எப்போதும் - எங்கு தூயமையை எதிர்பார்க்கிறோமோ அங்கும் கூட (இறைவன் சம்பந்தப்பட்ட) போலி இராச்சியம்.

எனவே மர்மயோகி - நம் கேடுகெட்ட, நமக்கு கேடுவிளைவிக்கும் - கலாச்சாரம் நாளுக்கு நாள் சக்தி வாய்ந்த் Frankenstein's Monster ஆகி விட்டது.

நமது கலாச்சாரத்தை - தனிநபர், பொது - வாழும் வகையை - மாற்ற முடியுமா?

முடியும் என்றால், அரசியல் தூய்மையாகும்.

அது முடியாது. அரசியல் மட்டுமல்ல: கல்வித்தளங்கள், மருத்துவ, மற்றும் மருந்துச்சாலைகள் (Today hot news: TN Health Secretary Subbaaraj conceded that huge load of fake drugs have landed in TN and are being sold by chemists), அரசு அலுவலங்கள், பிச்சையெடுப்போரிடமும் கூட (Union government is thinking of issuing ID to Beggars. அதைப்பெறுவதற்கு எவ்வளவு ஊழல் செய்வார்கள் இந்தப்பிச்சைக்காரர்கள் என நினத்துப்பாருங்கள்) கோயில்களில் (பணத்தை அதிகம் எதிர்பார்க்க்லாமென்றால், பூஜாரி அவருக்குத்தான் முதல் மரியாதை தருவார்) - இப்படியாக நாம் கெட்டு வாழ்கிறோம். தான் வாழ, எந்த ஒழுக்க்க்கேடும் சரி, எவன எப்படி போனாலென்ன ? என்று வாழும் நம்வாழ்க்கையை சரிபடுத்த முடியுமா?


திருத்த முடியுமா?

இப்படிப்பட்ட கலாச்சாரத்தை திருத்தமுடியும்போது, நாம் முயற்சிக்காமலே அரசியல்வாதிகள் தூய்மை, ஒழுக்கம், மக்கள் நலம்பேணுபவர்களாக மாறிவிடுவர். நடிகர்கள் அரசியலுக்கு வந்தால், அப்பெருங்குணங்களுக்கு முன் மாதிர்களாகவே திகழ்வர்.

Anonymous said...

திருத்த முடியுமா? முடியாது.

இதற்கு வழியே இல்லையா?

முதல்மந்திர்யாலோ, பிரதமமந்திரியாலோ, ஊழல் பெருச்சாளிகளைப் பிடிக்க முடியவில்லை. அவர்களைப்ப்டித்தால், அவர்கள் ஆட்சியை ஸ்தம்பிக்க வைத்துவிடுவார்கள்.

நாம் அடிக்குத்தான் பய்ப்படுவோம். உதை. மயிலே மயிலே இறகு போடு என்றால் போடாது. மரமேறிப்பிடித்து, இறகை இழுத்துப்பறி.

எல்லாரையும் மிரட்டி பணியவைக்கும் தலைவரால் ஓரளவுக்கு முடியும்.

மாயாவதி, ஒரே நாளில் 250 அரசு வழக்குரைகர்களை டிஸ்மிஸ் பண்ணிவிட்டார். இந்திராவில் எம்ர்ஜென்ஸ்யின் போது, அரசு இயந்திரம் சீரானது. வேலகள் நேரம் தவ்றாமல் நடந்தன. அதன் பின் பழைய் ஊழல் வழிக்குத்திரும்பின.

இந்திராவுக்கு மக்கள் கொடுத்த தீர்ப்பு: டிஸ்மிஸ் ஃப்ரொம் ஆட்சி.

இல்லையா?

Anonymous said...

என்னையே உங்களால் திருத்த் முடியாது. அதைச்செய்யும் சக்தி Ms Reema Sen அவர்களுக்கே உண்டு. அவ்ரில்லாவிடில் உங்களுக்கு என் பின்னூட்டம் கிடைத்திருக்காது.

முதலில் நீங்கள் சரியா? இலஞ்சம் கொடுத்துத்தானே பின்னூட்டம் வாங்குகிறீர்கள்?

நம்மைப்போலத்தான் எல்லாரும்.

Anonymous said...

நான் எழுதிய நீண்ட பின்னூட்டத்தை வெள்ளைக்காரன் ஒரே ஒரு வரியில் சொல்லிவிட்டான்:

Every people deserve their leaders.

பொருள்: மக்கள் எப்படியோ அப்படியே தலைவர்க்ளும் (ஜன்நாயகத்தில்)

Unknown said...

இந்தியாவில் ஒட்டு வாங்கி, விடுதலைப்புலிக்கு வக்காலத்து வாங்கும் வைக்கோ

mind ur words about LTTE
this is ur problems dont disribe about ltte here

மர்மயோகி said...

நன்றி jo amalan rayan fernando..

மர்மயோகி said...

திரு marutheesan நீங்கள் இலங்கை தமிழராக இருக்கலாம். வைக்கோ வை உங்களுக்குப் பிடிக்கலாம்..அனால் நான் இந்தியத் தமிழன்..எங்கள் நாட்டுக்கோ துரோகம் செய்பவன் எவனும் துரோகியே...இந்தியாவில் ஓட்டுப் பிச்சை வாங்கி விடுதலைப்புலிக்கு வக்காலத்துவாங்கும் வைக்கோ ஒரு தேச துரோகிதான்..அவனுக்கு ஒட்டு வாங்கணும் என்றால் யாழ்பாணத்தில் போய் ஓட்டுப் பிச்சை எடுக்கட்டும்..எங்கள் தமிழ் நாட்டையும் இந்தியாவையும் சுடுகாடக்கவேண்டாம்

Unknown said...

so the neengal MGR avarkaliyum thuroki enkireerkala he did lots of things for tamil nadu poples and Ltte as well he is the one who helped for Ltte u know dat

மர்மயோகி said...

திரு marutheesan அவர்களே..நன்றாக கவனியுங்க.. இலங்கை இந்தியாவல்ல..அங்கே துன்புறுத்தப் படும் தமிழர்களுக்கு ஆதரவாக நானும் ஒரு காலத்தில் கொடி பிடித்தவன்தான்..அவர்களுக்கு MGR போன்றோகள் உதவியதுதான் பெரும்தவறு..நீ அங்கே பாதிக்கப்படுவதற்கு ஏன் தமிழகத்தில் வந்து குண்டு வைக்கவேண்டும்? அன்றே MGR கைவிட்டு இருந்தால், மீனம்பாக்கம் ஏர்போர்டில் குண்டு வைக்கப்பாடும் ஏராளமான அப்பாவிகள் கொல்லப் பட்டிருக்க மாட்டார்கள்.. கோடம்பாக்கத்தில் பத்மநாப உட்பட மற்ற தமிழர்களும் கொல்லப் பட்டிருக்க மாட்டார்கள்..ஏன் இந்தியாவின் அடுத்த பிரதமர் என்று அழைக்கப்பட்ட ராஜீவ் காந்தியை கொன்றவர்களை எப்படி மன்னிக்க முடியும்? இந்தியாவால் தேடப்படும் ஒரு கொலைகுற்றவாளிக்கு வக்காலத்து வாங்கும் எவனும் தேச துரோகிதான்..

Unknown said...

வணக்கம் மர்மயோகி அவர்களே
இந்திய படைகள் இலங்கையில் வந்து 6000 தமிழர்களை கொன்றபோது வாய் கட்டி வேடிக்கை பார்த்த நீங்கள் எல்லாம் ஒரு ராஜீவ் காந்தி
கொன்ற போது மட்டும் கவலை படுகிண்றீர்களே அவர்கள் உயிர் மட்டும் என்ன சாதரணமா உங்களுக்கு உங்க மண்ணில்ல உங்க ஆழ கொன்றது தப்புதான்
அதுக்கு நீங்கள் எங்க இனத்தை எங்க மண்ணில கொன்றதும் தப்பு தான்
உங்க நாட்டில மட்டும் தான் துரோகிகள அப்பாவி என்று சொல்லுவீங்க ஏன் அப்போ மும்பையில தாக்குதல் நடத்தின தீவிரவாதிகளும் அப்பாவிகள் தானே அவங்களுக்கும் சிலை வையுங்க உங்க புனித பூமில

மர்மயோகி said...

நன்றி திரு marutheesan அவர்களே..
இந்திய படைகள் அங்கே நடத்திய கொடுமைகள் அநியாயம்தான்...ஆனால் அதற்கு ராஜீவ் காந்தியில் கொலை தீர்வல்ல.. அதேசமயம் நீங்கள் ஒன்றை கவனிக்கவேண்டும்..எல்லாராலும் அனுதாபத்துடன் பார்க்கவேண்டிய அந்த நிகழ்வு, ராஜீவ் காந்தி கொலையால் விடுதலைப்புலிகள் மீது ஒட்டு மொத்த கோபமும் திரும்பிவிட்டது..இன்று விடுதலைப்புலிகளின் வீழ்ச்சிக்கும் அதுவே காரணமாயிற்று...விடுதலைப்புலிகளின் உரிமைப்போரை குறைகூறவில்லை..அது பாதிக்கப்பட்ட இடத்தில் நடக்க வேண்டும்..ராஜீவ் காந்தி விடுதலைப் புலிகளை ஒழிக்கவேண்டும் என்று அமைதிப் படையை அனுப்பவில்லை.ஆனால் அதில் சில தவறுகள் ஏற்பட்டுவிட்டன..உங்கள் இடத்தில் போராடாமல் இந்தியாவை அதுவும் தமிழ்நாட்டை கலவர பூமியாக்கியவர்களை நாங்கள் எப்படி மன்னிக்கமுடியும்..அதுவும் எங்களிடம் ஓட்டுப் பிச்சை எடுக்கும் வைகோ - விடுதலைப்புலிக்கு வக்காலத்து வாங்குவதை ஏற்றுகொள்ளவே முடியாது..அதுவும் அவன் நிச்சயமாக அதற்கு பணம் வாங்கி இருப்பான் - முதல் சாட்சி முன்னாள் விடுதலைபுலி கருணா..அவரே வைக்கோ என்ற துரோகிக்கு பணம் கொடுத்ததை சொல்லி இருக்கிறார்..இரண்டாவது சாட்சி..- விடுதலைப்புலிகளை கடுமையாக எதிர்க்கும் ஜெயலலிதாவின் அடிமையாக வைகோ செயல்படுகிறான்..அவனது இரட்டை வேடம் புரிகிறதா?

இந்தியாவை கலவர பூமியாக்கும் எந்த தீய சக்தியும் எங்களுக்கு எதிரிதான், அதற்கு வக்காலத்து வாங்கும் எவனும் மிருகத்தைவிட கேவலமானவன்தான்! வைகோ அதில் முதன்மையானவன்

Sridhar said...

நண்பா ,
நான் ம.தி.மு.க உறுப்பினர் அல்ல.

இருந்தாலும் , கருணா வை நீங்கள் சாட்சி என சொல்வது, கேலி குரியது .
நாளை, ராஜபக்ஷே விரும்பினால், இந்த மர்ம யோகி யும் எங்களிடம் பணம் பெற்றார் என சொல்வான் .
துரோகி கலை சாட்சி யாக (அல்லது நண்பனாக) ஏற்று உள்ள உங்கள் அரசியல் நேர்மை தெளிவாக புரிகிறது.

//விடுதலைப்புலிகளை கடுமையாக எதிர்க்கும் ஜெயலலிதாவின் அடிமையாக வைகோ செயல்படுகிறான்

காந்தியும் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் சட்டம் பல வற்றை ஆதரித்து வந்துள்ளார். ஆதற்காக அவரை அப்படி சொல்ல முடியம்மா ??
உண்மைல்யில் , காந்தி கிரிப்ப்ஸ் கம்மிட்டே (cripps committee) பின்னர் தான் கடுமையாக எதிர்த்தார் (வெள்ளையனை வெளியேறு , செய் அல்லது செத்து மடி ) . அதற்கு முன் , பல முறை பிரிட்டிஷ் அரசாங்கத்தின் ஆதரித்து உள்ளார்.
சுபாஷ் சந்திர போஸ் இதை கடுமையாக எதிர்த்தார் என்பது வரலாறு . (ஆதரம்: போஸ் 'ன் புத்தகங்கள்) . காந்தி, பாகத் சிங்க்'ன் மரண தன்டைனை குட கடுமையாக அவர் எதிர்க்க வில்லை என்பது ஒரு சாராரின் குற்ற சட்டு.

அரசியலில் இது எல்லாம் சகஜம் !!!

Jayadev Das said...

அருமை.

Unknown said...

தசரதனுக்கு 60 ஆயிரம் மனைவிகள் இருந்தது போல கருணாநிதிக்கு இருந்திருந்தால் தமிழ் நாட்டில் பாதி பேருடைய வறுமை ஒழிந்திருக்கும்...

MoonramKonam Magazine Group said...

வலிமையான வரிகளில் நியாயமான ஆதங்கம்

hari said...

கடவுள் இல்லையென்று சொல்லவில்லை..கடவுள் இருந்தால் நல்லது என்று நாத்திகம் பேசியவன் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை தீவிரவாதி என்று படம் எடுத்து கல்லாகட்டுகிறான்..

this is too much... antha padathai nanraga pargavum, udal thanam enra onrai arimugapaduthiyathe kamal than

Post a Comment

பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?