Pages

Monday, March 22, 2010

கச்சேரி ஆரம்பம் - விமர்சனம்


வெளியூரிலிருந்து பெற்றோரிடம் கோவித்துக்கொண்டு சென்னை வரும் கதாநாயகன் (ஆமாம் எதற்கு வருகிறான்? ) ஒரு விபத்திலிருந்து கதாநாயகியால்  காப்பற்றப்படுகிறான்..அதிலிருந்து அவளையே சுற்றி சுற்றி வருகிறான்..அதன் பிறகு அவனுக்கும் அவன் பெற்றோருக்கும் எந்த தொடர்பும் இல்லை...பிறகு கதா நாயகி வில்லனால் கல்யாணம் செய்துக்க சொல்லி தொந்தரவு செய்யப்படுவதை அறிந்து அவளை வில்லனிடம் இருந்து காப்பாற்றி கல்யாணம் செய்து கொள்கிறான்..

ஒரு காமெடி காட்சி..அடிக்கடி நாம் டிவிக்களில் பார்க்கலாம்..வடிவேலும் இன்னொரு நடிகனும் நின்று கொண்டிருப்பார்கள்...அந்த வழியாக ஒருவர் உடம்பெல்லாம் இரத்தம் வழிய சென்று கொண்டிருப்பார்..."என்ன இப்படி போகிறாய்? " என்று வடிவேல் கேட்கும்போது, அந்த நபர் சொல்லுவார், "மேலே பிளைட்டிலிருந்து குதித்து விட்டதாக" சொல்லுவார்...வடிவேல் குழம்பிப் போய் நின்று கொண்டிருக்கும்போதே இன்னொரு நபர் கழுத்தெல்லாம் இரத்தமாக வருவான், அவன் சொல்லுவான் "ரயில் தண்டவாளத்தில் படுத்து இருந்ததாகவும், நான்கைந்து ரயில்கள் அவன் கழுத்தில் எறிச்சென்றதாகவும்" சொல்லிவிட்டு சாதாரணமாகப் போய்விடுவான்..அதே போல இன்னொருவன் உடம்பெல்லாம் சேறாக வந்து, தன மீது புல்டோசர் ஏறிச் சென்றதாகவும் சொல்லிவிட்டு செல்லுவான்..


இதுமாதிரி எவ்வளவு பயங்கரமாக தாக்கப்பட்டாலும், சாதாரணமாக எழுந்து வில்லன்களை தாக்கி வசனம் பேசும் ஒரு கதாநாயகன்...

(இந்த வில்லனின் அடியாட்களாக வரும் முட்டாள்கள் எத்தனை படங்களில் நடித்தாலும் திருந்தவேமாட்டான்கள்..எப்போவும் தனித்தனியாகத்தான் வந்து அடிவாங்குரானுங்க )

ஹீரோ எங்கேர்ந்து வந்தாலும் பரவாயில்லை..அவனைப் பற்றி எதுவும் தெரியாமல் உடனேயே லவ் பண்ணிவிடும் ஒரு கதாநாயகி..(அவள் கண்டிப்பாக பேரழகியாக இருக்கவேண்டும்)


சென்னையையே தன் கையில் வைத்திருக்கும் ஒரு வில்லன்,,,அழகான கதாநாயகியை பார்த்தவுடன்..வேற எந்த வேலையையும் பார்க்காமல் கதாநாயகியைச் சுற்றி சுற்றியே வருவது...கதாநாயகனை மட்டும் ஒன்றும் செய்யாமல் அவன் சொல்லுவதை எல்லாம் நம்பும் ஒரு முட்டாள் வில்லன்..

எவ்வளவு தான் டுபாக்கூராக இருந்தாலும் இப்படிதான் படம் எடுக்கும் உருப்படாத இயக்குனர்கள், மற்றும் தயாரிப்பாளர்கள்

 இப்படிதான் இருக்கும் என்று தெரிந்தும் வேலயத்துபோய் காசை செலவழித்து அந்த படத்தைப்பார்க்கும் ரசிகன் (நாமும்தான் ) .


யாரும் திருந்தபோவது இல்லை..

படத்தின் இறுதிக்காட்சியில் வில்லன் கதாநாயகனிடம் சொல்லும் ஒரு வசனம் :

"நீ கல்யாணம் பண்ணிக்கோ, நல்லா இரு நெறைய புள்ளங்கள பெத்துக்கோ ..ஆனா, அண்ணா சமாதிய பாக்கணும், எம் ஜி ஆர் சமாதியப்பாக்கனும்னு சென்னைக்கு மட்டும் வந்துடாதே"

அதோடு இன்னொரு வசனத்தையும் சேர்த்து இருக்கலாம்..

"இந்த படம் ஓடும் தியேட்டர் பக்கம் யாரும் வராதீங்க !" அப்படீன்னு..

5 comments :

உண்மைத்தமிழன் said...

ஹா.. ஹா.. ஹா..

அருமையான பன்ச்சான எண்ட் டயலாக்கு..!

க.பாலாசி said...

//(நாமும்தான் ) //

நான் இன்னும் படம் பாக்கலைங்க....

Mano said...

Mokkai padam.... Because of these kind of movies only tamil cinema going down...

ரோஸ்விக் said...

இன்னும் எவ்வளவு காலம் இப்படி மொக்கை படமா எடுத்து சாகடிக்கப் போரானுகளோ... ?

இந்த பொண்ணு கொஞ்சம் அழகா இருப்பா... அதுக்காகவெல்லாம் தற்கொலை பண்ணிக்க முடியாது ராசா....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இது தெலுங்கு படம் ஆடா(aata - Sidarth,Iliyana) வோட அப்பட்டமான காபி

Post a Comment

பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?