Pages

Tuesday, March 30, 2010

நாட்டின் முன்னேற்றத்திற்கு தமிழக அரசே முட்டுக்கட்டை..

காலையில் அந்த செய்தியை, செய்திதாள்களில் பார்த்து நான் மிகவும் அதிர்ச்சி அடைந்தேன்...ஒரு அரசாங்கம் இப்படியெல்லாம் பண்ணுமா? தமது மக்களின் வளத்திற்கும் முன்னேற்றத்திற்கும் இப்படியெல்லாம் ஒரு முட்டுக்கட்டை போட முடியுமா?

எந்த தைரியத்தில் ஹைகோர்ட்டில் அப்படி ஒரு மனுவைத் தாக்கல் செய்யலாம்?

நளினி என்பவள் யார்? எப்பேற்பட்ட தியாகி?

அவளை விடுதலை செய்ய முடியாது என்று சொல்கிற தைரியம் எப்படி இந்த அரசுக்கு வந்தது?

தமிழகம் ஒரு அமைதிப்பூங்காவாக இருந்தது...ராஜீவ் காந்தி வாக்கு சேகரிப்பதற்காக தமிழ்நாட்டிற்கு வந்தார்..

அவரை மனித வெடிகுண்டு வைத்து கொன்றுவிட்டு, அவ்வளவு பிரச்சினையிலும் கொலையாளி முருகனுடன் இன்பமாக இருந்து ஒரு குழந்தையும் பெற்று அவளை லண்டனில் வளர்த்து வரும் ஒரு மாபெரும் தியாகத்தை செய்து வரும் நளினியை இன்னுமா சிறையில் வைத்து கொடுமைப் படுத்துவது..

அவளை உடனேயே விடுதலை செய்து விட இங்குள்ள ஓநாய்கள் ஓலமிட்டுகொன்டிருந்தன..

இவள் விடுதலை ஆனால் உடனேயே தமிழகத்தில் மாபெரும் தொழில் புரட்சி ஏற்பட்டுவிடும், வறுமை நீங்கிவிடும், வேலை வாய்ப்பு பெருகிவிடும்...இன்னும் எல்லா வளங்களும் தமிழ்நாட்டை வந்தடைந்து இந்தியாவே சுபிட்சமாகி விடும் எனபது போலவும் அந்த கைக்கூலிகள் ஒப்பாரியிட்டுக்கொண்டிருந்தன..

சோனியா காந்தி புண்ணியத்தில் தூக்குத்தண்டனையில் இருந்து தப்பிய நளினி, தனது ஆயுள் தண்டனை முடிந்து விட்டதாகவும், தன்னை விடுதலை செய்ய வேண்டும் என்றும் மனு செய்திருந்தாள்..ஆனால் தமிழக அரசு சரியான ஒரு முடிவு எடுத்து அவள் விடுதலை செய்யப் பட வேண்டியவள் அல்ல என்று கூறி இருக்கிறது..

எத்தனையோ அப்பாவிகள், இன்னும் குற்றம் நிரூபிக்கப் படாமலேயே, ஏன் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படாமலேயே சிறைகளில் வாடிக்கொண்டிருக்கும்போது, இங்குள்ள சில ஓநாய்கள் ஏன் நளினியை மட்டும் விடுதலை செய்ய ஆலாய்ப் பறக்கின்றன?

தமிழ்நாட்டிலேயே அவள் மட்டும்தான் சிறையில் அவதிப்படுகின்றாளா? இவள் விடுதலையாகிவிட்டால் எல்லாம் சரியாகிவிடுமா? அவளுக்கு வக்காலத்து வாங்கும் தேச துரோகிகளுக்கு வேண்டுமானால் கல்லா நிறையலாம்...

இவளுக்காக ஓலமிடும் அந்த ஓநாய்கள் சிந்திக்கட்டும், ராஜீவ் காந்தி மட்டும் கொல்லப்படவில்லை..சுற்றி இருந்தவர்களும் அவருக்கு காவலிருந்த ஏராளமாக காவலர்கள், பொதுமக்களும் மாண்டார்கள். அவர்களுக்கும் குடும்பம் உண்டு, குழந்தைகள் உண்டு, ஆசைகள் உண்டு.. அவர்களும் மனிதர்கள்தான்..!

5 comments :

வெண்காட்டான் said...

anna santhirayanuku enna nadathathu anne? athallem neengal eluthi kilikka maatingal. ean endal ungada maanam pooitum.

வெண்காட்டான் said...

ungal rajeev raped tamil people here. athuku than ithu nadathtahtu endu namba maatingal. eaan oru congress naayum atha ilavila saakavillai? pls sollungaleen?

வெண்காட்டான் said...

becasue of rajiv death made italian business men who involved many illegal business deals.

ஜீவன்பென்னி said...

minus ottu pottachu.

மர்மயோகி said...

பின்னூட்டமிட்ட நண்பர்கள் வெண்காட்டான், ஜீவன் பென்னி ஆகிய நண்பர்களுக்கு நன்றி..
ஓட்டுக்கு அலையவில்லை..நானொன்றும் அரசியல்வாதி அல்ல...

Post a Comment

பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?